திமுக அமைச்சருக்கு எதிரான வழக்கு ரத்து

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2008-ல் வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறி ஐ.பெரியசாமி உள்பட 7 பேர் மீது, 2013ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவுசெய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், "அமைச்சர் என்பதால் வழக்கு தொடர ஆளுநர் மட்டுமே அனுமதி தரமுடியும். சபாநாயகர் அனுமதி அளித்தது தவறு" என்ற ஐ.பெரியசாமியின் வாதத்தை ஏற்று வழக்கை ரத்து செய்தார்.
Tags :