செல்போன் வாங்கித் தராததால் இளைஞர் தற்கொலை

by Staff / 21-10-2023 03:24:00pm
செல்போன் வாங்கித் தராததால் இளைஞர் தற்கொலை

கர்நாடகாவில் உள்ள சித்ரா துர்காவில் 20 வயது இளைஞர் தன் தாத்தாவிடம் போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளான். தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் தாத்தா போன் வாங்கித் தர மறுத்துள்ளார். போனை வாங்கிக் கொடுக்காததால் மனமுடைந்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான். அருகில் இருந்தவர்கள் இளைஞனை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் வழியிலேயே இளைஞன் உயிரிழந்தான். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலங்களாக சிறுவர்கள், இளைஞர்கள் செல்போனுக்கு அடிமையாகி இருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

 

Tags :

Share via

More stories