பல லட்சங்களை கையாடல் செய்த பெண் அரசு ஊழியர் கைது

கன்னியாகுமரி: பத்மநாபபுரம் நகராட்சியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த வளர்மதி என்பவருக்கு காசாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. அவர் ரூ.12.50 லட்சம் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து முதலில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வளர்மதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தினசரி வசூலாகும் முழு பணத்தையும் நகராட்சி வங்கி கணக்கில் செலுத்தாமல் குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டு மீதி பணத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
Tags :