ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், தினமும் ஒரு பழமாவது சாப்பிட வேண்டும்.

by Admin / 30-07-2023 04:36:26pm
 ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், தினமும் ஒரு பழமாவது சாப்பிட   வேண்டும்.

 நம் உடல் நன்றாக ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், தினமும் ஒரு பழமாவது சாப்பிட   வேண்டும்.. ஆப்பிள் பழத்தில் நார்ச்சத்து ,வைட்டமின் சி மற்றும் ஏராளமான ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளதால் அவை நமக்கு ஒரு நல்ல உணவாகவும் ஒரு சிற்றுண்டி ஆகவும் அமையும் .அடுத்து அவகோடா வெண்ணெய் பழச்சாறு என்று அழைக்கப்படும் அவகோடாவில் நமக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்பைக் கொண்டிருக்கின்றன .இது சுவையானது மட்டுமல்லாமல், நார்ச்சத்து ,பொட்டாசியம் வைட்டமின் சி ஆகியவை அதிகமாக உள்ளன.இதை காலை உணவாக எடுத்துக் கொண்டோம் என்றால் மிக ஆரோக்கியமாக இருக்கும்.

 அடுத்ததாக, வாழைப்பழங்கள். சாதாரணமாக ,நம்ம கடைகளில் மலிவான விலையில் கிடைக்கும் பழங்களாக இருப்பவை வாழைப்பழங்கள். இந்த வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எளிதாக ஜீரணித்து ஆரோக்கியத்தை தரக்கூடியதாக வாழைப்பழம் உள்ளது.

: அவுரி நெல்லி மிகவும் சுவையானது என்பதோடு ஆக்ஸிஜனேற்றம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆரஞ்சு பழங்கள்  வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து ஆக்சிஜனேற்றத்தின் சக்தியும் அதிக அளவில் உள்ளது.

: ஸ்ட்ராபெரிகள் சத்தான பழம் மட்டுமல்ல அதில், அதிகமான கார்போஹைட்ரேட் மற்றும் அதிக கலரிகள்  உள்ளது. இப்பழத்தின் வைட்டமின் சி நார்ச்சத்து மாங்கனிசம் அதிகமாக உள்ளன.

 இதைப் போன்று நிறைய பழங்கள் நமக்கு ஆரோக்கியத்தை தரக் கூடியதாக உள்ளன. திராட்சை,மிச்சை மாம்பழம் ,முலாம்பழம் பேரிக்காய், அண்ணாச்சி, ஃபிளம்ஸ் போன்ற பழங்களும் நமது உடம்புக்கு தேவையான சக்திகளை தந்து ஆரோக்கியமாக நம்மை வாழ வைக்கக்கூடிய அற்புத பழங்களாகும்.

 ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், தினமும் ஒரு பழமாவது சாப்பிட   வேண்டும்.
 

Tags :

Share via