தனி நபர் வருமான வரி திட்டத்தில் 7 லட்சம் வரை வரி தள்ளுபடி

by Staff / 01-02-2023 01:42:57pm
தனி நபர் வருமான வரி திட்டத்தில் 7 லட்சம் வரை வரி தள்ளுபடி

புதிய தனி நபர் வருமான வரி திட்டத்தின் கீழ் வரி செலுத்துபவர்களுக்கு 7 லட்ச  ரூபாய் வரை வருமான வரி கிடையாது என நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் அறிவித்துள்ளார். 2023- 2024ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது வருமானவரி தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.புதிய தனி நபர் வருமான வரி விதிப்பு முறையை கடந்த 2020-2021ம் ஆண்டு பட்ஜெட்டில் தாம் அறிமுகப்படுத்தியதை நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த புதிய வரிவிதிப்பு முறைப்படி,  ஆண்டுக்கு 7 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரிதள்ளுபடி கிடைக்க 2023-2024ம் ஆண்டு பட்ஜெட்டில் வகை செய்யப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.வருமானவரி விலக்கு உச்ச வரம்பு 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  ஆண்டுக்கு 3 முதல் 6 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 5 சதவீதமும், 6 முதல் 9 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 10 சதவீதமும், 9 முதல் 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 15 சதவீதமும், 12 முதல் 15 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும், 15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு 30 சதவீதமும் தனி நபர் வருமான வரி விதிக்கப்படும் என்றும் பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

 

Tags :

Share via