அமைச்சர் துரைமுருகன் சொத்து குவிப்பு வழக்கு.. உச்சநீதிமன்றம் உத்தரவு.

திமுக அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் இடைக்காலமாகத் தடை செய்துள்ளது. 2007-2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில், வேலூர் நீதிமன்றம் முதலில் விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் மறு விசாரணைக்கு தடை விதித்துள்ளது.
Tags : அமைச்சர் துரைமுருகன் சொத்து குவிப்பு வழக்கு.. உச்சநீதிமன்றம் உத்தரவு.