1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமனம்.

தமிழகத்தில் அடிப்படை மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்த ஆணைகள் வழங்கப்பட்டன. தாய் சேய் நலப்பணிகள், தடுப்பூசி, குடும்ப நலத்திட்டங்கள் உள்ளிட்ட பணிகளை புதிய செவிலியர்கள் மேற்கொள்வார்கள்.
Tags : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமனம்.