தமிழகத்தில் மனித-வன விலங்கு மோதலால் 80 பேர் பலி

by Staff / 06-02-2025 02:39:36pm
தமிழகத்தில் மனித-வன விலங்கு மோதலால் 80 பேர் பலி

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் மனித-வன விலங்கு மோதலில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இதுவே மிக அதிகம் என கூறப்படுகிறது. 2024-25ஆம் ஆண்டில் வன விலங்குகளால் 259 கால்நடைகள் உயிரிழந்தன. மேலும் மனிதர்கள் 138 பேர் பலத்த காயமுற்றனர். 2020-21ஆம் ஆண்டில் 58 பேர் உயிரிழந்தனர். அதேபோல், 2021-22ஆம் ஆண்டில் 40 பேர், 2022-23ஆம் ஆண்டில் 43 பேர், 2023-24ஆம் ஆண்டில் 62 பேர், 2024-25ஆம் நடப்பு நிதியாண்டில் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

 

Tags :

Share via