நீட் தேர்வு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்

by Editor / 03-02-2022 05:53:30pm
நீட் தேர்வு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கபட்ட நிலையில் நீட் தேர்வு  மசோதா ஆளுநர் மாளிகையில் இருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றவரை நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு நேரில் வலியுறுத்தினார். 
நீட் தேர்வுக்கு விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் தாமதமின்றி ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்ப  அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. இது தொடர்பாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும்  தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் உள்துறை அமைச்சரை  சந்தித்து மனு அளித்தனர். 

இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க  கோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். மேலும் இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சரியான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தி உள்ளதாகவும்,நீட் தேர்வின் அவசியம் குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையும் ஆளுநர் சுட்டிக்காட்டி உள்ளார்.

 

Tags : The governor who sent back the NEET

Share via