லடாக்கில் முதன்முறையாக அமலாக்கத்துறை சோதனை

போலி கிரிப்டோகரன்சி விவகாரம் தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்க இயக்குனரகம் (ED) இன்று (ஆகஸ்ட் 01) யூனியன் பிரதேசமான லடாக்கில் முதன்முறையான சோதனை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறையின் ஸ்ரீநகர் பிரிவு இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. கிரிப்டோகரன்சி வணிகம் தொடர்பாக தொடர்ந்து சோதனைகள் நடக்கும் நிலையில், லடாக், சோனிபட் (ஹரியானா) மற்றும் ஜம்முவில் ஒரே நேரத்தில் அதிகாரிகள் அதிரடி காட்டி வருகின்றனர்.
Tags :