இலவச தரிசனத்திற்கு திருப்பதியில் அனுமதி

திருப்பதியில் இன்று முதல் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் கடந்த 8 ம் தேதி முதல் தினந்தோறும் 2 ஆயிரம் டிக்கெட்கள் மட்டுமே வழங்கப்பட்டுவந்தன. அதுவும் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் தமிழ்நாடு பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்புவார்கள் என்பதால், தற்போது இரவு 9.30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு ஏகாந்த சேவையுடன் கோயில் கதவுகள் மூடப்படுகிறது. இன்று முதல் இரவு 11.30 மணி வரை பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்து 12 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெற்று கதவுகள் அடைக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக இலவச தரிசனத்தில் தற்போது தினந்தோறும் வழங்கப்பட்டு வரக்கூடிய 2000 டிக்கெட்டுகளை 8000 டிக்கட்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் தினந்தோறும் திருப்பதி பேருந்து நிலையம் எதிரே உள்ள தேவஸ்தான சீனிவாசன் பக்தர்கள் ஓய்வறையில் காலை 6 மணி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பக்தர்கள், தங்களின் ஆதார் அட்டையை காண்பித்து டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Tags :