மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் பலி

by Staff / 23-05-2023 05:32:13pm
மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் பலி

மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி அருகே குருத்தூர் கிராமத்தில் மேய்ந்து கொண்டிருந்த இரு பசுமாடுகள் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்து நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தது. நேற்று வீசிய சூறைக்ககாற்று காரணமாக மின் வயர் அறுந்து கிடந்த நிலையில் இரு பசு மாடுகளும் மிதித்து உயிரிழந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் அங்கு விசாரணை நடத்தினர். மேலும் கால்நடை மருத்துவரும் சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo