ஒரே ஓவரில் 4 விக்கெட் எடுத்த முகமது சிராஜ்

by Staff / 17-09-2023 04:45:07pm
ஒரே ஓவரில் 4 விக்கெட் எடுத்த முகமது சிராஜ்

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறி வருகிறது. 10 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்து 6 விக்கெட்களை இழந்துள்ளது. அபாரமாக பந்துவீசிய இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை தட்டித் தூக்கினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் முகமது சிராஜ்

 

Tags :

Share via