கெஜ்ரிவால் கைது: ஜனநாயக படுகொலை செல்வப்பெருந்தகை கண்டனம்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஒரு ஜனநாயகப் படுகொலை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, ஏற்கனவே ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அதன் மூலம் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று சதித் திட்டம் தீட்டியது பா. ஜ. க. ஆனால் மீண்டும் அங்கே ஆட்சி காப்பாற்றப்பட்டிருக்கிறது. அதை போலவே டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்ப்பதற்கு தேர்தல் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செயப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ஆம் ஆத்மி அமைச்சர் மணீஷ் சிசோடியா சிறையில் இருக்கிறார். அமலாக்கத் துறையின் இத்தகைய அடக்குமுறைகளை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியாவில் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகளின் மூலமாகத் தான் மோடி ஆட்சியில் அடக்குமுறைகள் ஏவி விடப்படுகிறது. எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்கு, முடக்குவதற்கு அமலாக்கத் துறையை மோடி பயன்படுத்துகிறார். இந்தியா கூட்டணியில் அரவிந்த் கெஜ்ரிவால் சேர்ந்தது முதற்கொண்டு அவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
Tags :



















