சங்கர நாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரயண சுவாமி சமேதே கோமதியம்பாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடித்தபசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் .
ஆடித் தபசு திருவிழாவை முன்னிட்டு சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக ஆடித்தபசு திருவிழா இந்த ஆண்டு கோவில் உட்பிரகாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 13- ந்தேதி தபசுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது இத்திருவிழாவில் தினமும் காலை மற்றும் இரவில் கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆடித் தபசு காட்சி நேற்று நடைபெற்றது. கோவில் உட்பிரகாரத்தில் சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயணசுவாமி, கோமதி அம்பாளுக்கு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கும்ப பூஜை நடைபெற்றது. இதையடுத்து சங்கரலிங்க சுவாமி,சங்கர நாரயண சுவாமி, கோமதி அம்பாள், ஆகியோருக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி பத்து நாட்கள் தவக்கோலம் இல்லாமல் அலங்கார கோலத்தில் இருந்த கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் திருக்காட்சி நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, மண்டகாபடிதார்ர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது .
Tags :