இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது
டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணி கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய வியூகங்கள் வகுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களைவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட 26 கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டம் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :