தென் மாவட்ட ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

by Staff / 19-12-2023 04:50:21pm
தென் மாவட்ட ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

தென் மாவட்டங்களில் கனமழை வெள்ளம் காரணமாக அப்பகுதியில் இருந்து இருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்களின் இயக்கத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை-சென்னை இடையேயான நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து இயக்கப்படுகிறது. குமரி-சென்னை இடையேயான கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து இயக்கப்படுகிறது. கொல்லம்-சென்னை இடையேயான அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கோவில்பட்டியிலிருந்து இயக்கப்படுகிறது. நாகர்கோவில்-சென்னை இடையேயான அந்த்யோதய எக்ஸ்பிரஸ் விருதுநகரில் இருந்து இயக்கப்படுகிறது. 22620 நாகர்கோவில்-சென்னை இடையேயான விரைவு ரயில் கோவில்பட்டியிலிருந்து இயக்கப்படுகிறது.

 

Tags :

Share via