திருச்செந்தூரில் முதியோர்கள், கைக்குழந்தைகள் வெய்யிலில் நீண்டநேரம் காத்திருந்து தரிசனம்.

by Editor / 02-05-2024 10:14:14pm
திருச்செந்தூரில் முதியோர்கள், கைக்குழந்தைகள் வெய்யிலில் நீண்டநேரம் காத்திருந்து தரிசனம்.

 உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில்   நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்கள் கூடுதலாக தரிசனம் செய்கின்றனர். 

 தமிழகத்தில் உள்ள குரு ஸ்தலங்களில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது.  இந்த நிலையில் நேற்று குருபெயர்ச்சியை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்கள் தரிசனத்திற்காக கோவிலில் குவிந்து வருகின்றனர்.  கோடை வெயில் வாட்டி வதைக்கும் சூழலில் தரிசனத்திற்காக காத்திருக்கக்கூடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெய்யிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்துவருகிறது. பல மாவட்டங்களிலும் 100 டிகிக்கும் மேல் வெய்யில் கடுமையாக வாட்டிவதைக்கிறது. கடுமையான வெய்ளின் தாக்கத்தால்  பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் 3- மணி வரை  வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இந்தநிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உச்சி வெய்யிலில் பச்சிளங்குழந்தைகள், முதியோர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை நிலவிவருகிறது.

 கோவிலில் கல் மண்டபம் இடிந்து பல ஆண்டுகளான நிலையில்  பிரகாரங்களில் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. கடுமையான வெப்பம் காரணமாகவும் காற்றோட்டமான சூழல் இல்லாததாலும்  குழந்தைகளை வைத்துக்கொண்டு விசிறியால் விசிறியபடி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். 

 இதனை அடுத்து பிரகாரங்களில் காற்றோட்டமான சூழலை அமைத்துக் கொடுத்திடவும் விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்..

 

Tags : திருச்செந்தூரில் முதியோர்கள், கைக்குழந்தைகள் வெய்யிலில் நீண்டநேரம் காத்திருந்து தரிசனம்.

Share via