லாரி கவிழ்ந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று (ஜூலை 13) இரவு ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. ரெட்டிபள்ளே செருவு அணையின் கரையில் ஒரு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு, ரயில்வே கோடூருக்குச் சென்றபோது லாரி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : 7 people have died in a horrific accident involving a lorry overturning.