தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு

by Staff / 05-05-2023 03:01:45pm
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு

விக்கிரவாண்டி பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் உள்ள ஓட்டல்களில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து கலெக்டர் பழனி உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், ஸ்டாலின் ராஜரத்தினம் மற்றும் அன்பு, பழனி, ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த பகுதியில் உள்ள ஓட்டல்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின்போது 2 ஓட்டல்களில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதன் உரிமையாளருக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் பல்வேறு ஓட்டல் மற்றும் கடைகளில் ஆய்வு செய்ததில் தரமில்லாத உணவுகள் மற்றும் கலாவதியானது மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத சிப்ஸ், பிஸ்கட் பாக்கெட்டுகள் போன்றவை இருப்பது கண்டறியப்பட்டது. இதில் சுமார் 25 கிலோ எடையுள்ள உணவு பொருட்களை பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர். இதில் 6 ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கி 15 நாட்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
 

 

Tags :

Share via

More stories