சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா

by Staff / 03-02-2024 03:18:03pm
சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கூலி தொழிலாளி கருப்பு என்பவற்றின் 17வயது மகள், திருத்தணி கோவிலுக்கு சென்றுவருவதாக கூறி சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசாருக்கு, சிறுமி ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், சிறுமியை மீட்டனர். கடத்திச்சென்றவர் திருத்தணி அருகே உள்ள விகேஎன் கண்டிகை பகுதியை சேர்ந்த பாலாஜி என்பதும், இவர் சிறுமிக்கு சித்தப்பா முறை என்பதும் தெரியவந்தது. காதலிப்பதாக கூறி அழைத்து சென்று சிறுமியை திருமணம் செய்து, 5 மாத கர்ப்பமாக்கியுள்ளார். இதையடுத்து போலீசார் போக்ஸோ வழக்கில் அவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories