ஐஏஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

by Admin / 13-05-2023 07:34:45pm
ஐஏஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றும் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது .முதலமைச்சரின் முதன்மை ச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் நிதித்துறை செயலாளராக நியமனம் நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதலமைச்சர்  முதன்மைச் செயலாளராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருந்த ககன் தீப் சிங் பேடி சுகாதார செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக இருந்த அமுதா உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.. சென்னை மாநகராட்சி ஆணையராக சுகாதாரத் துறை செயலாளராக இருந் த ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. போக்குவரத்து துறை செயலாளர்  கோபால்  லஞ்ச ஒழிப்பு ஆணையராக  நியமிக்கப்பட்டுள்ளார் சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராகவும்  உள்துறை  செயலாளர் பணீந்தா்ரெட்டி போக்குவரத்து  துறை செயலாளராகவும்   நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .பொதுப்பணித்துறை செயலாளர் டாக்டர் பி சுந்தரமோகன்  உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக  ஜெகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்...

 

 

Tags :

Share via