டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது .
டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது டெல்லி கலால் கொள்கை வழக்கை விசாரிப்பதிலிருந்து விலக்கு கோரிய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு அரசியல்வாதி எல்லை தாண்டி நீதித்துறை அதிகாரத்தை தீர்மானிக்க முடியாது என்று நீதிபதி குறிப்பிட்ட நீதிபதியின் பிள்ளைகள் மத்திய அரசு வழக்கறிஞராக இருப்பதாலேயே நீதிபதி பாரபட்சமாக செயல்படுவார் என்ற கருதுவது தவறானது என்றும் அவர்கள் தெரிவித்தார். இத்தகைய மனுக்கள் நீதித்துறையின் நேர்மை மீது அவநம்பிக்கையை விதைக்கும் முயற்சி இருப்பதாகவும் அழுத்தங்களுக்கு பணிந்து நீதி வழங்க முடியாது என்றும் அவர் கூறினார். மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் மற்றும் மணி சிசோடியா உள்ளிட்டோரை விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை நீதிபதி சுவர்ண காந்தா சர்மா விசாரித்து வருகிறார் நீதிபதி பாரபட்சமாக செயல்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் அவர் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும் என்றும் முன்னாள் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார் நீதிபதி பாராபட்சமாக செயல்படுவதாக தொடுக்க மனு தள்ளுபடி செய்யப்பட்டது இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஏப்ரல் 29ஆம் தேதிக்கு வர உள்ளது.
Tags :


















