பள்ளி தோழர்கள் தாக்குதல்.. சிறுவன் உயிரிழப்பு

வடகிழக்கு டெல்லியின் பஜன்புரா பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. டிசம்பர் 12ஆம் தேதி 17 வயது சிறுவன் அவனது பள்ளித் தோழர்களால் தாக்கப்பட்டான். இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவன், முதலில் ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக ஆர்எம்எல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இந்த கொலைக்கான காரணத்தை கண்டறிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :