வரி ஏய்ப்பால் தன்னிறைவு பெறாமல் தவிக்கும் ஊராட்சிகள்

by Admin / 09-08-2021 01:32:19pm
வரி ஏய்ப்பால் தன்னிறைவு பெறாமல் தவிக்கும் ஊராட்சிகள்

 

பொதுமக்கள் நேரடியாக செலுத்தும் சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, வணிக நிறுவனங்களின் உரிம கட்டணம், தொழில் வரி வருவாய் உள்ளிட்டவை பொது நிதி கணக்கில் சேர்க்கப்படுகிறது.

கிராம ஊராட்சிகளில் நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஊராட்சி பொது நிதி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானியக்குழு நிதி, மாவட்ட திட்ட நிதி என பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ்  அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

அதில் பொதுமக்கள் நேரடியாக செலுத்தும் சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, வணிக நிறுவனங்களின் உரிம கட்டணம், தொழில் வரி வருவாய் உள்ளிட்டவை பொது நிதி கணக்கில் சேர்க்கப்படுகிறது.
 
இந்தநிலையில் உடுமலை ஒன்றிய ஊராட்சிகளில் முறையான அனுமதி பெறாமலும் தொழில் மற்றும் சொத்துவரி செலுத்தாமலும் வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக பின் தங்கிய நிலையில் உள்ள ஊராட்சிகள் தன்னிறைவு பெறாமலும் உள்ளது. இதுகுறித்து ஊராட்சித்தலைவர்கள் கூறியதாவது:-

ஊராட்சி அனுமதி பெறாமல் அதிகப்படியான தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. இதற்கு கட்டுமான அனுமதி பெறுவதற்கு முன்னரே மின் இணைப்பு வழங்கப்படுவதே காரணமாகும்.தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கினால், பணியாளர்களின் நலன் கருதி அதனை தடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

அதேநேரம் சொத்துவரி செலுத்தாமல், தொழில் உரிமம் பெறாமல், புதுப்பிக்காமல் இருத்தல் என வரி ஏய்ப்பும் செய்யப்படுகிறது. இதனால்  ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பொது நிதியை மையமாகக் கொண்டு ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதி பணிகளை மேற்கொள்ள  முடிவதில்லை.

குடியிருப்பு வீடுகள், தொழில் நிறுவனங்கள் கட்டுமானத்திற்கு  ஊராட்சியின் அனுமதியை உறுதி செய்த பின்னரே மின் இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

 

Tags :

Share via