கல்வி மருத்துவத் துறைகளில் போதிய வசதிகள் இல்லை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

by Staff / 15-04-2022 03:02:38pm
கல்வி மருத்துவத் துறைகளில் போதிய வசதிகள் இல்லை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

 ஊரக பகுதிகளில் போதுமான அளவில் கல்வி மருத்துவ வசதிகள் இல்லாமல் இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சிங் காட்டில் பன்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பேசிய அவர் கல்வி மருத்துவத் துறைகளில் நகர்புறங்களை ஒப்பிடும்போது ஊரக பகுதிகளில் போதுமான வசதிகள் இல்லை என தெரிவித்தார். பள்ளி கட்டடம் இருந்தால் ஆசிரியர்கள் இல்லாமலும்... ஆசிரியர்கள் இருந்தால் கட்டடம்  இல்லாமலும் உள்ளதாக தெரிவித்தார்.. ஆசிரியர்களுக்கு வகுப்பறைகளில் மாணவர்கள் இல்லை என்றும் மூன்றும் இருந்தால் அங்கு கல்வி இல்லை என்றும் குறிப்பிட்டார் .பழங்குடியினர் பகுதியில் மருத்துவமனைகளிலும் கொரோனா சூழலில் அனுப்பிய வென்டிலெட்டர்கள் சுவாச கருவிகளை பொருத்த அங்கிருந்த மருத்துவர்களுக்கு தெரியவில்லை என்றும் பின்னர் அதற்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories