ஆம்னி பேருந்து கட்டணம் குறைந்தது: பயணிகள்மகிழ்ச்சி.

தீபாவளிக்கு முன்னிட்டு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்பட்ட ஆம்னி பேருந்துகளின் கட்டணம், தற்போது அரசு பேச்சுவார்த்தைக்கு பிறகு கணிசமாக குறைந்துள்ளது. போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து இந்த கட்டண குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. உதாரணமாக, சென்னை-நெல்லை செல்ல முன்பு ரூ. 5,000 வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், தற்போது ரூ. 3,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதைப்போல பிற ஊர்களுக்கான டிக்கெட் விலையும் குறைந்துள்ளதால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Tags : ஆம்னி பேருந்து கட்டணம் குறைந்தது: பயணிகள்மகிழ்ச்சி