அரசு மருத்துவமனை முன்பு நூதன முறையில் ஆர்ப்பாட்டம்..

by Admin / 13-08-2021 12:24:13pm
அரசு மருத்துவமனை முன்பு  நூதன முறையில் ஆர்ப்பாட்டம்..

மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு

ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சீர்கேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூதன முறையில்மருத்துவமனை அருகே ஆகஸ்ட் 12-ஆம் தேதி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரசு மருத்துவ மனையில் நடைபெறும் சீர்கேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நூதன முறையில் மருத்துவமனை படுக்கை போலவே அமைத்து நோயாளிகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் ராமேஸ்வரம் பகுதியில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கக் கோரியும் மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாதது எக்ஸ்ரே ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் நடைமுறை படுத்தாமல் இருக்கும் காரணங்களை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முருகானந்தம் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் செந்தில்வேல் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via
Logo