கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான முகாம்கள் மற்ற இடங்களில் திங்கள்கிழமை தொடங்குகிறது .

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தின் முடிவில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அமைச்சரவை கூட்டத்தில் ஓய்வு ஊதியம் திட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தற்போது வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாயிலிருந்து அதை 1200 ரூபாயாக உயர்த்துவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் தமிழகத்தில் தற்போது பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன இந்திரா காந்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், கைம்பெண்கள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டம்,கணவனால் கைவிடப்பட்டபெண்களுக்கான ஓய்வுத் திட்டம், 50 வயதுக்கு மிக திருமணம் ஆகாத ஏழைப் பெண்கள் ஓய்வு திட்டம், இலங்கையில் இருந்து வந்துள்ள மக்களுக்கான ஓய்வூதிய திட்டம் என பல ஓய்வூதிய திட்டங்கள் நடைமுறையில் இருப்பதாகவும் தமிழகத்தில் 1962 ஆம் ஆண்டு இதுபோன்ற ஓய்வூதிய திட்டம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதாகவும் அப்போது ரூபாய் 20 ஓய்வூதியம் வழங்கப்பட்டது என்றும் அதற்கு பிறகு படிப்படியாக உதவித்துடைய உயர்த்தப்பட்டு தற்பொழுது அது 1200 ரூபாயாக உயர்ந்து உள்ளதாகவும் தெரிவித்தார் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ஆக உயர்த்தப்பட்டு வருகிறது.. இதில் 30 லட்சத்து 55 ஆயிரத்து 850 பேர் பயனடைந்து கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஓய்வூதிய தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ஆக உயர்த்தி வழங்கி இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.. ஓய்வூதியம் தங்களுக்கும் வேண்டுமென்று இதுவரை 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்து காத்திருப்பதாகவும் அவர்களுக்கும் உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான முகாம்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது என்றும் மற்ற இடங்களில் திங்கள்கிழமை முகாம்கள் தொடங்க இருப்பதாகவும் அது மூன்று கட்டங்களாக நடத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார் நியாய விலை கடைகளில் முதல் கட்டமாக, இருபத்தி ஓர் ஆயிரத்து 31 முகாம்களும் இரண்டாம் கட்டமாக 14ஆயிரத்து, 194 முகாம்களும் என 36 ஆயிரத்து 925 முகங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
Tags :