முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள வீட்டிற்கு மூன்று வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அமலாக்கத்துறை சோதனை எதிர்க்கட்சிகளை முடக்கும் வகையில் ஏவப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர். அதிமுக, பாஜக இடையே கடும் வார்த்தைப் போர் முற்றி வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் நடக்கும் சோதனை தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து தற்பொழுது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு கட்சிகள் தயாராகி வரும் சூழ்நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காமல் ஒதுங்கியதால் இந்த சோதனை நடைபெறுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags :