திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி ரயில்மூலம் வந்த 1300 மெட்ரிக் டன் யூரியா.
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 77 ஆயிரத்து 753 எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதுவரை 25 ஆயிரத்து 154 எக்டேர் குறுவை அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளது.சம்பா சாகுபடி என்பது இதுவரை 25 ஆயிரத்து 437 எக்டேர் பரப்பளவில் நடைபெற்றுள்ளது.
மேலும் சம்பா 42 ஆயிரம் ஹெக்டேரில் தாளடி சாகுபடி என்பது 77 ஆயிரத்து 763 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்திட வேளாண்மை துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.மேலும் தனியார் உர கடைகளில் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சாகுபடிக்கு தேவையான கிரிப்கோ யூரியா உரங்கள் தஞ்சாவூர் கூட்டுறவு இணையம் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கிட 1300 மெட்ரிக் டன் யூரியா தூத்துக்குடியில் இருந்து ரெயில் மூலம் திருவாரூர் வந்தடைந்தது.
இதனை திருவாரூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, உள்ளிட்ட வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு தனித்தனியாக லாரிகள் மூலமாக உரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
Tags : திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி ரயில்மூலம் வந்த 1300 மெட்ரிக் டன் யூரியா.



















