சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்... 20 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு..

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முரளி. பெயிண்டரான இவர் அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை கடந்த, 2017 ஆண்டு கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து கேட்க சென்ற உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முரளியை போக்சோவில் கைது செய்து சிறுமியை மீட்டனர்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிக்கு, சிறுமியை கடத்தியதற்காக ஐந்து ஆண்டுகள் சிறையும், சிறுமியின் உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக ஐந்து ஆண்டுகளும், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றத்திற்காக 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Tags :