இந்தியாவில் நடைபெறும் மகளிர் டி20 போட்டியில் 90 வீராங்கனைகள் தேர்வு
இந்தியாவில் நடைபெறும் மகளிர் டி20 போட்டியில் 90 வீராங்கனைகள் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பெங்கால் மகளிர் டி20 பிளாஸ்ட் என்ற பெயரில் மகளிர் டி20 போட்டி மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 90 திறமையான மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை 6 அணிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த போட்டி பிப்ரவரி 7 ஆம் தேதிமுதல் 23 ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த போட்டியானது ஃபேன்கோடில் நேரலையாகக் காண்பிக்கப்படும்.
ஈஸ்ட் பெங்கால், ராஜஸ்தான் கிளப், எம்.டி ஸ்போர்டிங், டவுன், ஆர்யன் மற்றும் காளிகாட் கிளப் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிப்ரவரி 16 முதல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடர் நடைபெறுகிறது. இதனால் கல்யாணி நகரில் உள்ள பெங்கால் கிரிக்கெட் அகாதெமி மைதானத்தில் மகளிர் டி20 பிளாஸ்ட் போட்டியின் அனைத்து போட்டிகளும் நடைபெறுகின்றன. சர்வதேச போட்டிகள் வருவதால் இந்த முறை ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டியை நடத்த முடியவில்லை. என்று அவிஷேக் டால்மியா கூறினார்.
இந்தியாவிற்கு விளையாடிய சர்வதேச வீராங்கனைகளும் இப்போட்டியில் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :