பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் வட மாநிலபுண்ணிய தலங்களுக்கு இயக்கப்பட உள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி மேலாளர் பேட்டி.

by Editor / 10-04-2023 09:01:39pm
பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் வட மாநிலபுண்ணிய தலங்களுக்கு இயக்கப்பட உள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி மேலாளர் பேட்டி.

பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலானது செங்கோட்டை வழியாக வட மாநிலங்களில் உள்ள புண்ணிய தலங்களுக்கு இயக்கப்பட உள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி மேலாளர் பேட்டி.

இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி மூலம் சுற்றுலா பயணிகளுக்காகவே பிரத்தியேகமாக 'பாரத் கௌரவ் சுற்றுலா' ரயிலானது தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 இந்த ரயிலானது, தனது முதல் சேவையை 'புண்ணிய தீர்த்த யாத்திரை' என்ற பெயரில் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள உள்ளது.

 அதாவது, மே மாதம் 4-ம் தேதி முதல் 11 நாட்கள் 12 இரவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்த ரயிலானது, கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு, கொல்லம் வழியாக தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூர் சென்றடைந்து அங்கிருந்து விஜயவாடா வழியாக வட மாநிலங்களில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு செல்ல உள்ளது.

அந்த வகையில், வடமாநிலங்களில் உள்ள பூரி, கோனார்க், கொல்கத்தா, கயா, வாரணாசி, அயோத்தி, அலகாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புண்ணிய தளங்களுக்கு செல்ல உள்ள சூழலில், புண்ணிய தளங்களில் அருகாமையில் உள்ள சுற்றுலா தளங்களுக்கும் அழைத்துச் செல்ல ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 மேலும், இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருவதாகவும், மொத்தம் 700 பயணிகளை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via