திமுக செயலாளர் கடைக்கு வாடகை தராமல் மிரட்டுவதாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெண் பரபரப்பு புகார்.

by Editor / 10-04-2023 08:57:14pm
திமுக செயலாளர் கடைக்கு வாடகை தராமல் மிரட்டுவதாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெண் பரபரப்பு புகார்.

திமுக பேரூர் கழக செயலாளர் கடைக்கு வாடகை தராமல் மிரட்டுவதாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெண் பரபரப்பு புகார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி.இவர் இன்று அவரது மகனுடன் சேர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்று புகார் ஒன்றை அளித்தார்.அந்த புகாரில், ஆலங்குளம் திமுக பேரூர் கழகச் செயலாளராக உள்ள நெல்சன் என்பவர் தனது குடும்ப சொத்தாக உள்ள கடையை வாடகைக்கு எடுத்து வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார்.

அந்த கடைக்கு அவர் சில வருடங்களாக வாடகை கொடுக்காமல் எங்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார். மேலும், தான் ஆளுங்கட்சி பேரூர் கழக செயலாளர் எனவும், என்னிடம் வாடகை கேட்டு தொந்தரவு செய்தால் ஆள் வைத்து அடிப்பேன் எனவும் கூறி தன்னையும் தன் குடும்பத்தாரையும் மிரட்டுகிறார்.

ஆகவே, எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கி எனது கடையை அவரிடம் இருந்து மீட்டு தரும்படி கேட்டுக் கொள்வதாக அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 அந்த புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், ஆளுங்கட்சி பேரூர் கழக செயலாளர் என கூறி தான் தொழில் செய்து வரும் கடைக்கு வாடகை கொடுக்காமல் நீண்ட நாட்களாக ஒரு பெண்ணை மிரட்டி வரும் பேரூர் கழக செயலாளர் நெல்சன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை என்கிறார் அந்த பெண்.

 

Tags :

Share via

More stories