வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணமாக

by Editor / 17-09-2025 03:23:54pm
வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணமாக

கன்னியாகுமரி மாவட்டம் மாராயபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (54) என்ற தொழிலாளி, தனது வீட்டில் இரண்டு நாட்களுக்கு மேலாக அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, அவரது மனைவி ராஜகுமாரி (44) மற்றும் மகன்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். சங்கரின் மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும் என புதுக்கடை போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

 

Tags :

Share via