மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்

by Staff / 15-04-2023 11:23:22am
மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்

கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. கரீம்குன்னம் பகுதியில் மாற்றுத்திறனாளி பெண் (46) ஒருவர், தனது வயதான தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர்கள் வீட்டில் உள்ள பொருள் ஒன்றை சரி செய்ய மெக்கானிக் வந்துள்ளார். அப்போது, வீட்டில் மாற்றுத்திறனாளி மற்றும் அவரது தாயார் மட்டும் இருப்பதை கவனித்த அவர், மூதாட்டியை பக்கத்து அறையில் வைத்து பூட்டினார். அதன்பின், அந்த மாற்றுத்திறநாளி பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories