பயங்கர சாலை விபத்து.. 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி

ஆந்திராவில் நடந்த கோர விபத்தில் 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஒய்எஸ்ஆர் மாவட்டம் கொண்டாபுரம் அருகே சித்ராவதி பாலத்தில், டைபூன் வாகனம் மீது லாரி பலமாக மோதியது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தின் போது 11 பேர் உறங்கிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. பலியானவர்கள் தாடிபத்திரியை சேர்ந்தவர்கள் என்றும், திருப்பதியில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் போது இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :