பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம் - மாயாவதி சாடல்

by Staff / 15-05-2023 11:40:49am
பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம் - மாயாவதி சாடல்

உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாஜக அரசு அரசியல் சாசனத்தை தவறாக பயன்படுத்தியதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அதிகார துஷ்பிரயோகம் செய்ததன் விளைவுகளை பாஜக சந்திக்கும் காலம் வரும். மேயர் தேர்தலில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் தங்கள் கட்சி வெற்றி பெற்றிருக்கும். பாதகமான சூழ்நிலையிலும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு அவர் நன்றி கூறினார். 17 மாநகராட்சிகளிலும் மேயர் பதவியை பாஜக கைப்பற்றியுள்ளது. 17 மேயர் பதவிகளுக்கு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via