தமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

சென்னை புழல் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை கொண்டுள்ளனர். உயிரை மாய்த்து கொண்டவர்கள் செல்வராஜ் மற்றும் அவரின் மகன்கள் சுமன்ராஜ், கோகுல்ராஜ் என தெரியவந்துள்ளது. லாரி அதிபரான செல்வராஜ் தனது மனைவி, மகள் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் செல்வராஜ் இந்த முடிவை எடுத்ததாக தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்கிறது.
Tags :