முருகன் சிலை வடித்ததால் சிற்பியின் கண்ணை பறித்த மன்னன்,

by Admin / 12-05-2022 02:04:07pm
முருகன் சிலை வடித்ததால் சிற்பியின் கண்ணை பறித்த மன்னன்,

முருகன் சிலை வடித்ததால் சிற்பியின் கண்ணை பறித்த மன்னன், மீண்டும் கண்ணை கொடுத்த முருகபெருமான்.இறைவனின் அற்புதங்களையும் சிவனடியார்களின் பக்தி தீரத்தையும் புலப்படுத்தும் இலக்கியங்களுள் முதன்மையானதுபெரிய புராணம்.இக்காப்பியத்தில் ,காட்டுக்குள்ளிருக்கும் சிவன் கோவிலுக்கு வழிபட வரும் வேடர் ஒருவரின்பக்தியை சோதிக்கும் முகமாக,இறைவன் தன் கண்ணில் ரத்தம் வடியுமாறு செய்வார்.அதுகண்டு பொறுக்காத அவ்வேடவர் தம் கண்ணை நோண்டிஎடுத்து,சிவனின் சிலைக்கு பொருத்துவார்.ஒரு கண்ணில் வடிந்த உதிரம் மறு கண்ணிலும்வடிய அவ் வேடவ பக்தர் தம் மற்றொரு கண்ணை யும் தோண்டி வைக்க இறைவன் அவர் முன் தோன்ற  அவரின் பக்தியை மெச்சி,இனி நீ  கண்ணப்பன் என்றே அழைக்கப்படுவாய் என்று அருள,அதிலிருந்துஅவர் கண்ணப்ப நாயனார் என்றே அழைக்கப்பட்டார். இப்புராணக்கதையை ஞாபகப்படுத்தும் ஒரு நிகழ்வு.ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் எட்டுக்குடியிலநடந்துள்ளது.இதோ,அவ்வரலாற்று சம்பவம்.முத்து ராச சோழ என்ற மன்னன் தம் ஆட்சிக்குட்பட்ட சிக்கல் என்ற ஊரில்  முருகபெருமாளுக்கு ஆலயம்எழுப்பிடவிரும்பி ,சிற்பியை அழைத்து கோவிலை நிர்மாணிக்க ஆணையிட்டார்.. ஸ்தபதியாகியசிற்பிகோவிலைஉருவாக்கியதோடு,அழகிய முருகன் சிலையையும் வடித்தார். முருகனின் அழகொளிரும் சிலையில்மயங்கியஅரசன்,இந்த முருகன் சிலை போல் இன்னொரு சிலை உருவாகக்கூடாது என்ற எண்ணத்தில் ,சிற்பியின்வலதுகட்டை விரலைத் துண்டித்துவிட கட்டளையிட்டான்.கட்டை விரல் துணையோடு சிலை வடிக்கும் சிற்பி கலங்க வில்லை.சிக்கல் கோவில் முருகன் போலவே எட்டுக்குடியிலும் முருகனுக்கு சிலைவடித்தார்.இதனை அறிந்த மன்னன் தன் ஆணையை மதிக்க சிற்பி தவறி விட்டதை அறிந்து கோபமும் ஆத்திரமும் அடைந்து,சிற்பியின் இரு கண்களையும்தோண்டி எடுக்க உத்திரவிட்டான்.மன்னின் இந்த கொடும் பாதகச்செயலையை கண்டுகொஞ்சமும் பயப்படாதசிற்பி,மீண்டும் ஒரு முருகன் சிலை வடிக்க எண்ணி ,சிறுமி  ஒருத்தியின் உதவியுடன் சிலை வடிக்க.எதிர்பாராத விதமாக,அவரது சிற்றுள் அவரது கையை க்குத்தி,ரத்தமு் பீறிடச்செய்தது.அந்த ரத்தில் ஒரு சில துளி தெறித்து ,சிற்பியின் கண்களில் பட,சிற்பிக்கு மீண்டூம் கண்கள் வந்தது

.ஸ்தல வரலாறு

படைப்பின் உன்னதத்தின் மறைபொருளாக உள்ள பிரணவ வேதத்தின் தத்துவத்தை அறியாததால்,முருகன் பிரம்மாவை
சிறையில் அடைத்து,பிரம்மாவின் படைப்புத்தொழிலையும் கைப்பற்றிட,..மும்மூர்த்திகளில் முதன்மையான சிவபெருமான்,
முருகனிடம் மூம்மூர்த்தியில் ஒருவரான பிரம்மாவை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டினார்.அத்துடன் உலக நன்மைக்காக அவர் படைப்புத்தொழிலை அவரிடமே வழங்கிட அறிவுறுத்தினார் தந்தையாகிய சிவ பெருமாள்.அதற்கு
முருகன் மறை பொருள்தெரியாமல் எப்படி படைப்புத்தொழில் செய்திடமுடியும் என்று வினவ,சிவனோ. நீயே,அவருக்கு
மறைபொருளை அறிய செய்து,படைப்பை அவரே மேற்கொஸ்ள செய் என்றார்.இதனை ஏற்றுக்கொண்ட முருகன்
பிரம்மாவிற்கு பிரணவ மறை பொருளை உணர்த்தி,அவரிடமே படைப்பத்தொழிலை வழங்கியதாக ஸ்தல வரலாறு
கூறுகிறது.உலகை படைத்த விராட் விஸ்வகர்மா-காயத்ரிக்கு இருக்கும் ஐந்து தலை போல் அவரதுசகோதராகியஉலக உயிர்களைப்படைக்கும் பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்ததாகவும் மறை பொருள் தெரியாததால் ஒரு தலையை முருகன் கிள்ளி எடுத்து விட்டதாக புராணங்கள் சொல்கின்றன.
முருகன் சிலை வடித்ததால் சிற்பியின் கண்ணை பறித்த மன்னன்,
 

Tags :

Share via