அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு தடை

by Staff / 26-02-2024 03:04:35pm
அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு தடை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த போது கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தார். அண்ணாமலையின் பேச்சு இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக சேலம் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து அண்ணாமலை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Tags :

Share via
Logo