கோழி சூப் செய்வது எப்படி?

by Admin / 10-08-2021 11:22:17am
கோழி சூப் செய்வது எப்படி?

தேவை

கோழி – 1 கிலோ

பெரிய வெங்காயம் – 2

இஞ்சி – 1 அங்குலம்

மிளகுதூள் – 2 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

செய்முறை

1 கிலோ கோழி கறியை சுத்தம் செய்து, துண்டுகளாக்கி நறுக்கிக் கொள்ளவும். 1 அங்குலம் இஞ்சி, 2 பெரிய வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் கோழித்துண்டுகள், நறுக்கிய இஞ்சி, வெங்காயம், 2 தேக்கரண்டி மிளகுதூள், தேவையான உப்பு, மஞ்சள் தூள் போடவும். மிதமான தீயில் வைத்து கோழிக்கறி வெந்ததும் இறக்கவும். ப்ரஷர் குக்கரில் தயாரிப்பதனால் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி விசில் சப்தம் கேட்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

 

Tags :

Share via