தலைமறைவாக இருந்த எம்எல்ஏ மகன் மருமகள் கைது
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகியோர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 18 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்து கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்து பெரும் பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகன் ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சற்று முன்னர் எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இருவரையும் சென்னை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags :



















