2 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட நீதிமன்றம் உத்தரவு

by Staff / 14-06-2024 04:22:05pm
2 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட நீதிமன்றம் உத்தரவு

தேனி மாவட்டம் பூதிபுரம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் 2 டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, தேனி மாவட்ட டாஸ்மாக் மேலாளர், தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடைகள் செயல்படக்கூடாது என்ற உத்தரவை மீறியதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 

Tags :

Share via