இரத்த சர்க்கரை அளவு குறையுமாம்
அன்றாட சமையலில் தவறாமல் சேர்க்கும் ஒரு காய்கறி தான் வெங்காயம். வெங்காயத்தில் கலோரிகள் குறைவு. வெங்காயத்தில் உள்ள இரண்டு முக்கிய கெமிக்கல்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
க்யூயர்சிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட் வெங்காயத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. இது சர்க்கரை நோயின் அறிகுறிகளைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் இது சிறுகுடல், கணையம், எலும்பு தசை, கொழுப்பு திசு மற்றும் கல்லீரலில் உள்ள செல்களுடன் முழு உடல் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
வெங்காயத்தில் உள்ள சல்பர் என்னும் சேர்மம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெங்காயமானது மருத்துவ பயன்பாட்டில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. வெங்காயத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. இலை பல வழிகளில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
Tags :