செந்தில் பாலாஜிக்கு ஜூலை 7 ஜாமின் கிடைக்கும்: திமுக நம்பிக்கை

by Staff / 14-06-2024 04:16:26pm
செந்தில் பாலாஜிக்கு ஜூலை 7 ஜாமின் கிடைக்கும்: திமுக நம்பிக்கை

செந்தில் பாலாஜி வழக்கை முடிக்காமல் அமலாக்கத்துறை வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாக திமுக தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. திமுக தரப்பு வழக்கறிஞர் சரவணன் கூறும்பொழுது, வருகிற ஜூலை 7 கண்டிப்பாக செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆதாரமே இல்லாமல் ஒருவரை கைது செய்து விட்டு, ஆதாரத்தை திரட்ட முடியாமல் அமலாக்கத்துறை திணறி வருகிறது. அதனால் தான் பல மூன்று மாதங்களில் முடிக்கப்பட வேண்டிய இந்த வழக்கை, முடிக்க முடியாமல் பல முறை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாய்தா வாங்கி வருகிறது” என குற்றஞ்சாட்டினார்.

 

Tags :

Share via

More stories