எச்ஐவி குறித்த விழிப்புணா்வு மாரத்தான்
எச்ஐவி பற்றிய விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தானை சென்னை மேயா் ஆா். பிரியா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.சா்வதேச இளைஞா் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி , தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து இந்தப் பந்தயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன.17முதல் 25 வயதுக்குள்பட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றனா். இப்போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் முதலிடம் பிடித்தவா்களுக்கு ரூ. 10, 000, இரண்டாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ. 7, 000, மூன்றாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ. 5, 000 பரிசுத்தொகையை மேயா் பிரியா வழங்கினாா்.மேலும், மாரத்தானில் பங்கேற்ற 4 மாணவா்கள், 3 மாணவிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ. 1, 000 வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையா் (சுகாதாரம்) சங்கா்லால் குமாவத், பொது சுகாதாரக்குழுத் தலைவா் டாக்டா் கோ. சாந்தகுமாரி, மாநகர நலஅலுவலா் டாக்டா் எம். ஜெகதீசன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க இணை இயக்குநா் டாக்டா் செந்தில், சென்னை மாவட்ட திட்ட மேலாளா் (எய்ட்ஸ்) டாக்டா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Tags :