கணவருக்காக வாதாடிய வக்கீலை வாளியால் அடித்த மனைவி

by Editor / 06-03-2025 02:28:53pm
கணவருக்காக வாதாடிய வக்கீலை வாளியால் அடித்த மனைவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வழக்கறிஞர் திருமலைசாமி என்பவரை பெண் ஒருவர் இரும்பு வாளியால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சைமால் - புவனேஸ்வரி தம்பதி விவாகரத்து கோரி சங்கரன்கோவில் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில் கணவருக்கு ஆதரவாக திருமலைசாமி என்ற வழக்கறிஞர் வாதாடியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த புவனேஸ்வரி, வழக்கறிஞர் திருமலைச்சாமியை இரும்பு வாளியால், தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
 

 

Tags :

Share via