மாடியில் இருந்து மனைவியை தள்ளிய கணவர்

by Staff / 24-02-2025 05:02:39pm
மாடியில் இருந்து மனைவியை தள்ளிய கணவர்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சாஜின் ஜோன் (31). இவர் ஸ்டுடியோ வைத்துள்ளார். இவரது மனைவி ஆட்லின் ஜமீலா (29) பி. எட் படித்து வருகிறார். இவர்கள் இரண்டு பேருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் திருமணத்தின்போது 40 பவுன் நகைகள் வரதட்சணையாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த சில மாதங்களில் கடன் அடைக்க வேண்டும் என்று கூறி சாஜின் ஜோன்  தனது மனைவியின் நகைகளை வாங்கி அடகு வைத்துள்ளார். ஆனால் அதன் பின்னர் நகைகளை மீட்கவில்லை.

இது குறித்து மனைவி கணவரிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட தகராறில்  ஆட்லின் ஜமீலாவை மாடியில் இருந்து ஷாஜின் ஜோன் கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயமடைந்தார். புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆட்லின் ஜெமிலா  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via